|
  அஞ்சாமை!
நேர்மை!! உண்மை!! 
WWW.EERAANAL.ORG gbt-bern@bluewin.ch
சுவிசஸ்சர்லாந்தில் தமிழீழ மக்கள்
விடுதலைக் கழகம் நடத்தும்
'மாபெரும் வீரமக்கள் தினநிகழ்வு'
02-07-2009:08.35:00

சூரிச் மாநகரில் மாபெரும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவை சிறப்பிக்கும் முகமாக
சுவிசஸ்சர்லாந்து நாட்டின் „தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்' பாடசாலைகளை இணைத்து
நடத்தும்
நிகழ்வு, எதிர்வரும் 05.07.2009 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.30 மணியளவில்
நடைபெறும் என்று அந்த அமைப்பின் தலைமை தெரிவித்துள்ளது. மேலும் „தமிழீழ மக்கள்
விடுதலைக் கழகம்' அமைப்பின் சுவிஸ் கிளையினரால் வருடந்தோறும் ஜுலை மாதத்தில்
நடத்தப் பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வுகள் சூரிச்மாநகரிலுள்ள உன்ரர் அப்போல்ரன்
மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்றும், இதில் ஆரம்ப நிகழ்வாக வீரமக்கள் தினத்திற்குரிய
மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் என்பன இடம் பெறுவதுடன், இதனைத் தொடர்ந்து நிகழ்வில்
பிரதம அதிதியாகவும், சிறப்பு விருந்தினர் களாகவும் பங்கேற்போரின் உரைகளும்
முக்கியஸ்தர்களின் உரைகளும் இடம் பெறவுள்ளது. அத்துடன் விசேட நிகழ்வுகளாக பின்னணி
இசைக்கு ஆடுதல், வினோதவுடைப் போட்டி, பொது அறிவுப்போட்டி, நாடகம், நாட்டியம் போன்ற
பல்கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. மற்றும் அண்மையில் சுவிஸ்வாழ் தமிழ் மாணவ
மாணவியர்களுக்காக தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் நடத்தப்பட்ட பொது அறிவுப்
போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்க்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்
இடம்பெறவுள்ளது என்பதால் பெற்றோர்களும் கழக ஆதரவாளர்களும், நண்பர்களும் மற்றும்
அன்பர்களையும் வருக! வருக!! வருக!!! என்று வரவேற்கின்றோம். தங்களின் ஆதரவுகளுக்கு
மட்டுமல்ல இதயசுத்தியோடு முன்வைக்கும் தங்களின் விமர்சனங்களையும் என்றும் நாம்
ஏற்றுக் கொள்வோம் என்றும் இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம். வேறு மேலதிக
விபரங்கள் தேவைப்படின் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு
கொள்ளவும். 076- 368 15 46.. 076-310 82 17.. 078 -312 43 39.. 077- 203 88 81,
GemeinsSchfts
Zentrum Affolten, Bodenacker.25, 8049 Zürich
விமானவிபத்தில்தெய்வாதீனமாக
உயிர் தப்பிய 14 வயது சிறுமி
02-07-2009:08.35:00

நேற்று முன்தினம் nஐர்மனிலிருந்து கெமரூன் நோக்கிப் பறந்த விமானம் இந்து
சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 152 பேரில் 14 வயதுச் சிறுமி
மாத்திரம் உயிர் தப்பினார். ஏனையோர் உயிரிழந்தனர் என்ற பரிதாப
நிலையில் கூட ஒரு துளி மகிழ்ச்சி உலகமக்களை இழுத்துச்சென்றது என்று அந்த விமான
விபத்தில் உயிரிழந்தோரை மீட்கும் பணியில் இருந்தவர்கள் தமது அனுபவத்தை பகிர்ந்து
கொண்டார்கள் என்றும் தெரியவருகின்றது. இந்து சமுத்திரத்தின் எல்லையில்
விபத்துக்குள்ளான nஐர்மன் விமானத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய 14 வயது
சிறுமியின் உடல் நிலை கவலைப் படுமளவிற்கு ஒன்றுமில்லையென வைத்தியசாலை அதிகாரிகள்
தெரிவித்து உள்ளனர். அந்த விமானத்தைக் கரை சேர்க்கவும் மீட்பு பணியாளர்கள் தீவிர
முயற்சிகளில் இறங்கியுள்ளனர். விமான உதிரிப்பாகங்கள், சடலங்கள் என்பன விபத்து நடந்த
பகுதியில் கிடப்பதாக தேடுதல் பணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர். இந்தப்பகுதியில்
எண்ணெய்க் கசிவு வெளிவருவதால் விமானத்தின் எரிபொருள் தாங்கி உடைந்துள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. சிதைந்த விமானத்தின் பாகங்கள் உருக்குலைந்த உடல்களுக்கு
மத்தியில் அச்சிறுமி நீந்தியவாறு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார் என்றும்
உடனே தண்ணீரில் மிதக்கும் பொரு ளொன்றை வீசினோம். அச்சிறுமியால் அதைப் பிடிக்க
முடியவில்லை இதனால் தண்ணீரில் குதித்து அச்சிறுமியைக் காப்பாற்றினேன். அவர்
என்னுடன் கைகுலுக்கினார். சூடான தேனீரை சிறுமிக்கு கொடுத்தோம். பின்னர் பெயரையும்
ஊரையும் கேட்டுத் தெரிந்து கொண்டோம் என்றும். எஞ்சியுள்ள உடல்கள், விமானப் பாகங்களை
மீட்டெடுக்க தேடும் பணிகள் தொடரவுள்ளன என பிரான்ஸ்ஸைச் சேர்ந்த இச்சிறுமி தனது
பெற்றோருடன் கெமரூன் நோக்கிச் சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது என்றும்
தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தீர்வுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்த
பின்னர் யார் எதிர்த்தாலும் அந்த
யோசனை அமுல்படுத்தப் படும்
02-07-2009:08.35:00

அரசியல் தீர்வு யோசனை தொடர்பாக எத்தகைய இணக்கப்பாடு வந்தாலும் அதனை முதலில்
மக்களின் இணக்கப்பாட்டுக்காக முன்வைக்கப்படும். 13ஆவது திருத்தச் சட்டத்தை
அதேபோல
நிறைவேற்றுவதா அல்லது அதனை விட கூடுதல் அதிகாரம் வழங்குவதா என்பது குறித்து இது வரை
கட்சிகளிடையே இணக்கப் பாடு எட்டப்படவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச்
செய்வதானால் அதனை விட சிறந்த தீர்வொன்று மாற்யடாக இருக்க வேண்டும். நாட்டுக்குப்
பாதிப்பான எந்தத் தீர்வையும் முன்வைக் கப்போவதில்லை என ஜனாதிபதி தெளிவாகக்
கூறியுள்ளார். மேலும் அரசியல் தீர்வு யோசனை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட
சர்வகட்சிக் குழுவின் யோசனை ஒரு மாதத்தில் வெளியிடப் பட உள்ளது. அந்த யோசனை
குறித்து சகல கட்சிகளுடனும் ஆராயப்படும். இது தொடர்பில் பொது இணக்கப்பாடு
எட்டப்பட்ட பின்னர் சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் கருத்து
பெறப்படும். மக்களின் அங்கீகாரம் கிடைத்தால் யார் எதிர்த்தாலும் அந்த யோசனை
அமுல்படுத்தப் படும். நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றே முன்வைக்கப்படும்.
சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப தீர்வு யோசனை முன்வைக்கப்பட மாட்டாது. நாட்டுக்குப்
பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்வே முன்வைக்கப்படும் என்று பல அரசியல் முரண்பாடுகளை
எதிர்த்து முன்வைத்துள்ளார் ஐனாதிபதி.
பாராளுமன்ற எம்பீக்கள் மத்தியில்
தொலைநோக்கு தன்மை இல்லாத
பலத்த புடுங்குப்பாடுகள்
02-07-2009:08.35:00

அரசசேவை என்பது ஒருபகுதியில் வாழும் எமது மக்களின்; தேவைகளையும் அம்மக்களின்
பாதுகாப்புக்களையும் மற்றும் அவர்களுக்கு வேண்டிய முறையில் வாழும் வழிகளை
காட்டுவதேயாகும். இப்படியான நிலையில் மக்களால் தெரிவு செய்த ஒருமாவட்ட பாராளுமன்ற
அங்கத்தவர் பாராளுமன்றத்திற்கு சென்று தனது மக்களின் பிரச்சனையை புரிந்து அந்த
மக்களுக்கு உதவி செய்ய முன் வருவதை எந்தக்கட்சி தலமையும் கேள்விகேட்க முடியாது
என்பதுதான் உண்மை. ஆனால் கடந்தகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற
எம்பீக்கள் நாட்டைவிட்டு ஓடியவர்களை விட நாட்டில் இருந்து தமது மக்களின் தேவைக்கு
பலவிடையங்களை செய்துகொடுத்தவர்கள் என்ற வரிசையில் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்
சிவநாதன் கிஷோர் ஒருவர் என்பதை அந்த மாவட்டத்து மக்கள் அறிவார்கள். ஆனால் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினராகவே இருந்து கொண்டு எதிர்காலத்தில் தனது
மக்கள் என்ற முறையில் செயற்பட உள்ளதாக இருக்கின்றார் என்று தெளிவாக அவர் தனது
கருத்தை மக்கள் மத்தியில் மட்டுமல்ல தனது கட்சித்தலமைக்கு குறிப்பிடவும்
தயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்தக் கட்சியில் இருந்து
நீக்கப்படுவார் என்றோ அல்லது கட்சிகொள்கைக்கு முரன்பாடு கள் ஏற்படும் என்றோ
அநாகரீரமான முறைகளை மேற்கொள்கொள்வது மக்களின் நலனை மேலும் பாதிக்கும் விடையம்.
இன்று வெளிநாடுகளில் இருக்கும் பல கட்சிபிரமுகர்கள் மற்றைய எதிர்கட்சி
பிரமுகர்களுடன் சேர்ந்து கூட்டம் வைப்பதும் மக்களை சந்தித்து மக்களின் பிரச்சனையை
ஒரேமேசையில் பேசித்தீர்பதும் மக்களின் குறைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது சாதாரன
மான சேவையாகிவிட்டது. ஆனால், இலங்கையில் மட்டும் தான் இந்த அநாகரீக மான முறைகள்
கடந்த 30 வருடமாகத்தான் மக்களை மட்டுமல்ல பாராளு மன்றத்து எம்பீக்களின் சேவைகளிலும்
பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பாராளுமன்றத்து அங்கத்தவர் தனது தொலைநோக்கு
பார்வையில் தனது மக்களுக்கு செய்யும் சேவையை யாராலும் தடுக்கவும் முடியாது
முடக்கவும் முடியாது என்பதை இன்றும் ஒருசில சேவைமனப்பான்மை உடையவர்கள் செய்யத்தான்
செய்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேசமயம் எதி;கட்சியில் உள்ள ஒரு
பாராளுமன்ற அங்கத்தவர் தனது கட்சியில் இருந்துகொண்டு தனது கட்சியின் கொள்கையை
மதித்துக் கொண்டு ஆளும் கட்சிக்கு நாற்காலிக்காக அரசாங்கத்தின் திட்டத்திற்கு
ஏற்றமாதிரி தனக்கு ஆதரவளித்த மக்களுக்காக அரசிடம் உதவிகளை நாடுவது எந்தவித்தில்
தப்பு என்ற உட்கருத்தை கடந்த காலத்தில் ஒருசில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எம்பீக்கள் மட்டுமல்ல மற்றையகட்சி எம்பீக்களும் கேட்டுவருவது குறிப்பிடத் தக்கது.
இதனால் மக்களுக்கு சேவைகள் செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் தமது சொந்த தொழிலில்
இருந்துகொண்டே ஆளும் கட்சியிடம் எவ்வித பதவிகளையும் தாம் பெற்றுக்கொள்ளாது
கட்சியின் மதிப்பை பேனமுடியும் என்ற வெளிநாட்டு அரசியல் முறைகளின் ஒன்றை மிகவும்
தெளிவாக கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா பாராளுமன்ற சிவநாதன்
கிஷோர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருசிலருக்கு சங்கடமாகத்
தான் இருக்கும் ஆனால் எமது மக்களின் அவலங்களை போக்கும் நிலையும் இதுதான் என வவுனியா
ரிப்போட்.
புண்ணை நோண்டி அசிங்கப்படுத்தும்
புரியாத அரசியல்வாதிகளால் மீண்டும்
மக்கள்மத்தியில் குழப்பம் ஏற்படுமா?
02-07-2009:08.35:00

புலிகள் தலைவர் பிரபாகரன் தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்தார் என்று
தொடர்பாகவழக்கின் தற்போதைய நிலை என்ன? என்று காங்கிரஸ் மத்தியில் உள்ளது ஆனால் அதனை
வெளிப்படையாக எம்.எல்.ஏ ஞானசேகரன் கேள்வி கேட்டு முழக்குவதால் நாட்டு மக்கள்
மத்தியில் குழப்பம் ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. சட்டம் மற்றும் நீதி
நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப் பேரவையில் புதன்கிழமை
நடைபெற்ற போதே இந்த கேள்வி எங்கே எழுப்பப்பட்டது என்றும் தெரிய வருகின்றது. „முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் மற்றவர்களுக்கு
தண்டனை விதிக்கப்பட்ட போதும் பிரபாகரன் மீதான வழக்கு நிலுவையில் இருந்தது.
இலங்கையில் பிரபாகரன் இறந்துவிட்ட நிலையில், அவரது இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டதா?
பிரபாகரன் மீதான வழக்கு முடிக்கப்பட்டதா என்பதை இந்த அவைக்கு தமிழக அரசு தெரிவிக்க
வேண்டும். தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும், தேர்தலில் போட்டியிடுவது என்பது அதிக
செலவு பிடிக்கும் காரியமாக உள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில்
திருத்தம் மேற்கொண்டு, வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்.
இதற்கு மத்திய அரசை வலியுறுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்தப்
பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஞானசேகரன்.
மகிந்த சிந்தனைக்கு கலங்கம்
விதிக்கும் பல அமைசர்களின்
அசைட்டத்தனத்தால் மக்கள்
பெரும் அவதி
02-07-2009:08.35:00

இலங்கை அரசாங்கத்தில் அதிகாரங்களை துட்பிரயோகப் படுத்தும் அமைச்சர் களால் மீண்டும்
மகந்த சிந்தனைக்கு பெரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளும் கட்சி
ஐனாதிபக்கே பல கலக்கங்கள் ஏற்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார
ஸ்தாபனத்தின் நன்மதிப்பு பெற்ற இலங்கை சுகாதார அமைச்சு தனது நாட்டில் உள்ள
சுகாதார ஒழுங்குகளை நன்முறையில் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு
அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இதேவேளை இவ்வருடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு
உள்ளானவர் கள் அதிகளவு இனம் காணப்பட்ட மாதமாக ஜூன் விளங்குவதாகவும் இம்மாதத் தில்
மாத்திரம் 5,357 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுகாதாரப்
பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச் சின் நோய் பரவுகை தடுப்பு பிரிவு மருத்துவபீடம்
அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. டெங்கு காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தின் முதல்
ஆறுமாத ங்களிலும் 156 பேர் உயிரிழந்து உள்ளனர். என்றாலும், இக்காலப்பகுதியில்
இக்காய்ச்சலுக்கு 13692 பேர் உள்ளாகியுள்ளனர் எனவும் அந்த மருத்துவ அதிகாரி
கூறினார். இந்த காய்ச்சல் மேலும் மக்கள் செறிவாக பகுதியில் தான் அதிகரித்து
வருகின்றது. இதுபற்றி சுகாதார அமைச்சு காட்டும் அக்கறை குறைந்துள்ளதே மக்களின்
அவலம் இன்று அதிகரித்ததற்கு காரணம் என்றும் குறிப்பிடப்பிடத்தக்கது. குறிப்பாக
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக கம்பஹா, கொழும்பு,
கண்டி, ஹம்பாந் தோட்டை, திருகோணமலை, கேகாலை, மட்டக்களப்பு, களுத்துறை ஆகிய
மாவட்டங்களிலேயே அதிக உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பகுதியிள்ள
மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவானர் கள் என்றபோதிலும் அங்கு ஆளும் கட்சி ஆதரவாளர்கள்
அதிகம் அக்கறை காட்டாது இருப்பதால் மேலும் இம்மாவட்டங்களிலும் இக்காய்ச்சல் காரணமாக
பலர் உயிரிழந்திருப்பதையும் மறந்துவிட முடியாது என்றும் தெரிய வருகின்றது.
இலங்கையில் மொழிசீர் செய்வது
மாத்திரமல்ல, அங்கேயிருக்கிற
மக்களும் சீராக வாழ வேண்டும்
02-07-2009:08.35:00

இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், அங்குள்ள தமிழர்களின் சம
உரிமைக்காகப் போராடுவோம்'' என்று பேரவையில் முதல்வர் கருணாநிதி கூறினா.அரசியல்
பிரச்னைகளை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானத்தை, சிறப்பு கவன ஈர்ப்பை அணுகவில்லை.
அதுவரையில் மிகுந்த மகிழ்ச்சி. இலங்கையில் இருக்கின்ற அரசுக்கும், தமிழகத்தில்
இருக்கின்ற ஒரு அரசுக்கும் இடையே நடை பெறுகின்ற வாக்குவாதம் அல்ல. இரண்டு இனங்கள் -
அங்கே சிங்கள இனம் - இங்கே தமிழ் இனம் என்ற இனப் போராட்டம் இது. இலங்கையில்
மொழியைச் சீர் செய்வது மாத்திரமல்ல, அங்கேயிருக்கிற மக்களும் சீராக வாழ வேண்டும்
என்ற நிலையை ஏற்படுத்த அங்கேயுள்ளவர்கள் போராடினர். அப்போது, தமிழீழம் தனியாகப்
பிரிய வேண்டும் என்ற அந்தக் குரலும் எழுந்தது. சமஉரிமை கிடைக்க போராடுவோம்...
தமிழீழத்தைப் பற்றி பல்வேறு கட்சிகளும் வலியுறுத் திப் பேசிய நேரத்தில்,
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், "தமிழீழத்தை ஆதரிக்கவில்லை, மாநில சுயாட்சி
என்ற அளவில் தான் அங்கே தங்களுடைய கொள்கையை எடுத்துச் சொல்கிறோம், இன்றைக்கும்
சொல்கிறோம்' என்று வலியுறுத்தினார்கள்.
அமைச்சர்ரானதும் அநாவசியமான
தலையீடுகளுக்குள் மூக்கை ஓட்டும்
விநாகமூர்த்தி முரளிதரன்
02-07-2009:08.35:00

ஐனநாயக நீரோடையில் நீந்த எண்ணிய புதிய அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன்
பலவிடையங்களில்; அநாவசிய செய்திகளை வெளியிட்டு அநாகரீக மான முறையில் தனது மூக்கை
தானே உடைத்துக் கொள்கின்றார் என்று பல குற்றுச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. கிழக்கு
மாகாணத்தில் “ஹிரோ“ என்ற எண்த்தை வளர்த்துக் கொண்டு செயல்படுவதால் தான்
இந்த மூக்குடைவு நடைபெறுகின்றது என்றும் தெரியவருகின்றது. மேலும் தமிழ் இராணுவப்
படையணி உருவாக்கும் திட்டம் குறித்து புதிய அமைச்சர் விநாக மூர்த்தி முரளிதரன்
வெளியிட்ட செய்திகள் ஆளும் கட்சியையும் அதன் நிர்வாகத்தையும் அசிங்கமாக்கும்
நிலைக்குள் தள்ளப்பட்டார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ள வேளையில் இச்செய்தியில்
உண்மைக்கு புறம்பானது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திட்டுவட்டமாக
குறிப்பிட்டுவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது. தமிழ் இராணுவப் படையணி ஒன்று
அமைக்கப்பட உள்ளதாக தேச நிர்மாண அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் பி.பி.சிக்கு
அளித்த செவ்வியில் உண்மைக்கு புறம்பானது இதுபற்றிய எந்தத் ஒரு திட்டங்களும்
அரசவட்டாரத்தில் முன்னெடுக்குவில்லை என்றும் திட்டுவட்டமாக பாதுகாப்புச் செயலாளர்
கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழர்களை
மதிக்கின்ற ஐனநாயக அரசு
ஒன்று தான் அமைய வேண்டும்
02-07-2009:08.35:00

இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ் மொழிக்கு சமதகுதி,
அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்று இப்படிப்பட்ட நிலைமைகளுக்காகப் போராட
வேண்டியவர்களாக இருக்கிறோம். திராவிட நாடு கோரிக்கை... திராவிடநாடு கொள்கையை
கைவிட்டதற்கான காரணத்தை விளக்கி அண்ணா ஒருபுத்தகமே எழுதினார். அதில், "கட்சி வேண்டுமா,
திராவிட நாடு வேண்டுமா என்று கேட்டால் கட்சி இருந்தால் தான் திராவிடநாடு கேட்க
முடியும்' என்றார். மக்களுக்காகத்தான் ஒரு இயக்கத்தை நடத்துகிறோம். நமக்காக அல்ல.
நாம் ஒரு கொள்கையைச் சொன்னால், அந்தக் கொள்கை ஈடேற வேண்டும்; வெற்றி பெற வேண்டும்.
மக்களுக்காகச் சொல்கின்ற எந்தக் காரியமானாலும், எந்த லட்சியமானாலும் அது மக்களைப்
பாதிக்கக் கூடிய அளவுக்கு அமையும் போது சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு
சிந்தித்து எப்படிப் போகலாம், எந்த வழியில் செல்லலாம் என்று தீர்மானிக்க வேண்டும்.
தமிழர்கள் அரசு அமைய... இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.
அது எதிர்காலத்தில் ஜனநாயக அடிப்படையில் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்களவர்களையும்
சேர்த்து ஆளுகின்ற அரசாக அமையுமானால், நம்மைப் போல மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும்
இருக்க முடியாது. அதையும் அமைத்தே தீரலாம். அமெரிக்காவை இன்றைக்கு கருப்புத் தோல்
ஆண்டு கொண்டிருக்கிறது. அதுபோன்று, இலங்கையிலும் தமிழர்கள் அரசு அமைவதற்கு
வெகுதூரம் இல்லை என்ற நம்பிக்கையைப் பெறலாம். இலங்கையில் தமிழர்களின் வாழ்வை
வளமாக்க வேண்டும். இன்றைக்கு அங்கே இருக்கின்ற சிங்கள அரசின் மூலமாகத் தான் அதைச்
செய்ய முடியும். இந்திய அரசு அதற்கான வலியுறுத் தலை, வற்புறுத்தலைச் செய்ய வேண்டும்
என்பதில் மாறுபாடான கருத்தில்லை. இலங்கையில் போர் முடிந்த பிறகும், தமிழர்களுக்கு
முழுமையான சுதந்திரமும், நல்ல வாழ்வும் கிடைக்கவில்லை என்ற உணர்வோடு இந்தப்
பிரச்னையை அணுக வேண்டும். நம்முடைய பேச்சால், நடவடிக்கையால் சிங்களவர்களின் கோபத்தை
அதிகரித்தால் அது தமிழர் களுக்குத் தான் வேதனையாக வந்து சேரும். கோபத்தை
அதிகரிக்காமல்... இலங்கையில் உள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு
இருக்கிறது என்பது உண்மையென்றால், சிங்களவர்களின் கோபத்தை அதிகமாக ஆக்காமல்
பார்த்துக் கொள்ளவேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக பலமுறை தீர்மானம் நிறை
வேற்றியபோது தமிழர்களாகக் கூடவில்லை. கட்சியினராகக் கூடினோம். இப்போது, அந்தப்
பேதங்களை மறந்து, தமிழர்கள் என்ற நிலையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிலே வேறுபாடான நிலையில் இருக்கலாம். பாமக
தலைவர் ஜி.கே.மணி பேசும் போது, இந்தக் கருத்துக்கள் சுட்டிக்காட்டப்
பட்டுவருகின்றது. இன்றைய அரசியல் முறைகளை இலங்கை மக்களும் சீரனித்துப்பழகவேண்டும்
என்பது தான் இன்றைய இலங்கை
குளத்தோடு கோவித்துக்கொண்டு “கழுவாமல்“
விட்டால் யாருக்கு நட்டம் என்பதை இன்றாது
உணர்ந்துவிட்டார்கள் அரசியல் தலைவர்கள்
02-07-2009:08.35:00

இலங்கையில் ஆயுதக்கலாச்சாரம் அழிக்கப்படவேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இலங்கை அரசு
கடும் சட்டத்தை கொண்டுவந்தால் அது பலருக்கு ஆபத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
கடந்த 30 வருடங்களாக இருந்த ஆயுதக் கலாச்சாரம் இன்று அழிக்கப்பட்டு விட்டது என்ற
பெருமையில் தலைக் கனத்தில் அரசு போடு;ம் பலதிட்டங்களை விட, போடும் கூத்து அதிகம். இது
அரசின் பின்னடைவுகளை ஏற்படுத்தம் என்று பலர் சுட்டிக்காட்டி இருந்ததை மகிந்த அரசு
ஏற்றுக்கொண்டு மற்றும் எல்லாத் தலைவர்களையும் ஒன்று இணைத்து நாட்டின் இனவாதத்திற்கு
முற்றுப் புள்ளிவைத்து, எதிர்காலத்தை இனியாவது தீர்ப்பார் என்ற நம்பிக்கையை பல
வெளிநாட்டு அரசுகள் தெரித்து வந்தமையும் குறிப்பிடத் தக்கது. இதனால் நாட்டின்
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி
தலைமையில் கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள வுள்ளன என்றும்
தெரியவருகின்றது. “குளத்தோடு கோவித்து எதையும் சாதிக்கமுடியாது என்பது நாமறிந்த
உண்மை. இந்த விடையம் அரசியல் வாதிகளுக்கு தெரியாது போனது ஏன்? இவர்கள் இனியாவது
எல்லோரும் ஒன்றாக இணைந்து சேர்ந்து ஒருமுடிவுக்கு வருவார்களா? என்பது தான் மக்கள்
கேள்வி“ எனினும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடை பெறவுள்ள சர்வகட்சிக்
குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன்
பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தலைமையிலான குழுவொன்று கலந்து கொள்ளவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் தேர்தல்க் கடமைகளுக்காக
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு சென்றிருப் பதாலும், கூட்டமைப்பின்
பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் தங்கியிருப் பதாலும்
கொழும்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில்
கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்
எம்மிடம் கூறினார். எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வகட்சிக்
குழுக் கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளத் தீர்மானித் திருப்பதாகவும் அவர்
குறிப்பிட்டார். இன்றைய சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி,
ஜனநாயக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்து
கொள்ளவுள்ளன. எனினும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது பற்றி
ஜே.வி.பி. இதுவரை தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வில்லை. எனினும் நவீன உலகில்
தண்ணீர் இல்லாது “கழுவும்“ திட்டத்தை இவர்கள் வைத்திருக்களாம் என்ற சந்தேகம்
என்றும் மக்களிடம்.
40 வருட அரசியல் அனுபவமுள்ள
மஹிந்தாவுக்கு தமிழர் பிரச்சினை
தீர்ப்பது சுலபமானவிடையம்
02-07-2009:08.35:00

பிரதான பிரச்சினையான பயங்கரவாதப் பிரச்சினை முன்கூட்டியே தீர்க்கப் பட்டுள்ளது.
இரண்டாவது பிரச்சினையான அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பிரச்சினை அவ்வளவு
கஷ்டமானதல்ல.
40 வருட அரசியல் அனுபவமுள்ள தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப்
பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து போதிய தெளிவு உள்ளது. தமிழ் மக்களுக்கும் ஏனைய
மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வழி வகுக்கப்படும் என்றும், பயங்கரவாதத்திற்கு
தீர்வு கண்டதைப் போல தமிழர்; பிரச்சினைக்கும் தன்னால் தீர்வுகாண முடியும், எனவே
இதற்காக தனக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கட்சித் தலைவர்களைக் கோரியுள்ளதாக
ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 13ஆவது திருத்தம்
குறித்தும் அரசியல் தீர்வு யோசனை தொடர்பாகவும் கடந்த சில தினங்களாகப் பல்வேறுபட்ட
கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் அரசாங்கத்தில் அங்கம்
வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்த
ஜனாதிபதி இது குறித்து கட்சிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார். மஹிந்த
சிந்தனையில் அரசியல் தீர்வுயோசனை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்வு
யோசனை குறித்து சகல தரப்பினருடனும் பேசி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர்
சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது
குறித்து ஊடகங்களுக்கு எடுத்துரைக்குமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். அரசியல்
தீர்வு தொடர்பில் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சகலரும்
ஒன்றாக ஐக்கிய இலங்கையினுள் வாழக் கூடிய தீர்வொன்று வழங்கப்படும்.
அரசாங்கம் மக்களின் அன்றாடத்
தேவைகளை அபிவிருத்திகளை
எடுத்தச்செல்லும் என உறுதி
02-07-2009:08.35:00

2,87,000 க்கும் மேற்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது உண்மையிலேயே பாரியதொரு சவால்
எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள
வேண்டியுள்ளதோடு
அப்பிரதேசங்களில் புதைக்கப் பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றவேண்டி உள்ள தாக வும்
அவர் தெரிவித்தார். அரசியல் ரீதியாக எடுக்கப் பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து
கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அது தொடர்பாக தன்னிடம் ஒருதெளிவான திட்டம்
இருப்பதாகவும் தெரிவித்தார். பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டிலேயே கண்டறியப் பட
வேண்டும் என வலியுறுத்திக் கூறிய அவர் 13 ஆவது சீர்திருத்தத்தை
நடைமுறைப்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.
அரசாங்கம் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிவரும் அதேநேரம் அபிவிருத்தி
நடவடிக்கைகளையும் அதற்குச் சமாந்திரமாக முன்னெடுத்து வருகின்றது எனவும் முகாம்களில்
தங்கியிருக்கும் சிறுவர்கள் பாடசாலை களுக்குச் செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு
இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களிடையே
தங்கியிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர் களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூக
நீரோட்டத்தில் இணைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தான் விரும்புவதாகவும்
ஜனாதிபதி குறிப்பிட்டார். என்றும் வடக்கில் புதைக்கப் பட்டுள்ள கண்ணிவெடிகளை
அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதியுதவி அளிக்கும் என இலங்கை
வந்திருக்கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி உறுதியளித்துள்ளார்.
“மஹிந்த சிந்தனை ஊடாக
மக்களுக்கு வழங்கப்பட்ட சகல
வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்
01-07-2009:08.35:00

கடந்த காலத்தில் ஒரு குழுவாக செயற்பட்டு பயங்கரவாதத்தின்
பிடியிலிருந்து நாட்டைவிடுவித்தது போல் எதிர்காலத்தில் அபிவிருத்தி தொடர்பான
சவால்களை வெற்றி கொள்வதற்காக சகலரும் ஒன்றுபட்டு பொது நோக்கில் செயற்பட
முன்வர வேண்டும் என்றார். இவ்வைபவத்தின் போது ஸ்ரீ.ல.சு.கட்சியின் 12 புதிய தொகுதி
அமைப்பாளர்களுக்கும், 12புதிய மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஜனாதி பதியினால் நியமனக்
கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் அமைச்சர் கள் மைத்திரிபால சிறிசேன,
சுசில்பிரேம ஜயந்த் மற்றும் முக்கிய ஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும்
பாதுகாப்பு படையினருடன் இணைந்து வெற்றிகொள்ளப்பட்டுள்ள நாட்டையும், நாட்டு
மக்களையும் மீண்டும் காட்டிக்கொடுப்பதற்கு எவருக்கும் இடமளியோம் என்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். “மஹிந்த சிந்தனை ஊடாக மக்களுக்கு வழங்கப்
பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப் படும். அதற்காக அர்ப்பணிப் புடன்
செயற்படுவேன். ஸ்ரீ.ல.சு.கட்சி எப்போதும் நாட்டையும், நாட்டு மக்களையும்
முன்னிறுத்தியே முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுத்து வந்திருக்கிறது. அதேவேளை
அரசியல் அதிகாரத்தில் தொடர்ந்திருக்கும் நோக்கில் ஒரு போதும் எமது கட்சி
தீர்மானங்களை எடுத்தது கிடையாது. நாடு தொடர் பாக எடுக்கப் படவேண்டிய தீர்மானங்கள்
உரிய நேரகாலத்தில் எடுக்கப் படும். இவ்விடயத்தில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம்.
ஜனநாயகத்தின் ஆணிவேரான பத்திரிகைகளை
தீயிட்டு கொளுத்துவதும், மரண அச்சுறுத்தல்
விடுவதும் அடிப்படை மனித உரிமையை
மீறும் செயலாகும் என வீ.ஆனந்தசங்கரி
01-07-2009:08.35:00

கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டுமே தவிர, கருத்துக்களைக் கருவிகொண்டு
அடக்க முற்படக்கூடாது. பத்திரிகைகளைத் தீயிட்டுக் கொளுத்து வதும், அவற்றின்
பணியாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுவதும் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும்
என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்த அறிக்கையில்
தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த சில
தினங்களுக்கு முன்னர் யாழ். நகரில் வெளியாகும் தினசரி பத்திரிகைகளை தீயிட்டு
கொளுத்திய அதே கும்பல் ‘உதயன்’ பத்திரிகைகளும், அங்கு பணிபுரியும்
பணியாளர்களுக்கும் பெரும் மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளது. இதை தமிழ் விடுதலைக்
கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. வடக்கில் வசந்தத்தை வீசச் செய்வோம்; ஜனநாயகத்தை
மலரச் செய்வோம் என்று வெறும் வார்த்தை களால் மட்டும் சொன்னால் போதாது. அதை
செயலிலும் காட்ட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேரான பத்திரிகைகளை தீயிட்டு கொளுத்து
வதும், மரண அச்சுறுத்தல் விடுவதும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும்.
கருத்துகளை கருத்துகளால் வெல்லவேண்டுமே தவிர, கருத்துகளை கருவி கொண்டு அடக்க
முற்படக்கூடாது. மக்களை தவறான பாதைகளுக்குத் திருப்பாத கருத்துகளை சொல்வதற்கும்,
எழுதுவதற்கும் ஊடகங்களுக்குச் சுதந்திரம் இருக்கவேண்டும். அப் போதுதான் ஒரு
ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டி யெழுப்பமுடியும். இவ்வாறான வன்முறைச் செயற்பாடுகள்
அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கவேண்டுமாயின், அரசின் அனுமதியைப் பெற்று ஆயுதம்
வைத்திருப் பவர்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள்
களையப்பட வேண்டும். அனைவரும் சுதந்திரமாக பேசவும் செயற்படவும் அனுமதிக்க வேண்டும்.
ஆசிய அபிவிருத்தி வங்கி பத்து
பில்லியன் ரூபா இலங்கைக்கு
நிதியாக வழங்க முன்வந்துள்ளது.
01-07-2009:08.35:00

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் நீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார
உட்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்படுவதுடன் புனரமைத்து மேம் படுத்தப் படும்
என்றும் இத்திட்டத்திற்குச் செலவிடப்படும் நிதியில் 35 மில்லியன் அமெரிக்க
டாலர்கள் வவுனியா மற்றும் மன்னார் நகர நீர்வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார
மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் செலவிடப்படும். எஞ்சிய நிதியுதவி மூலம் புத்தளம்
சிலாபம் உட்பட வடமேல் மாகாணத்திலுள்ள நகரங் களின் நீர் வழங்கல் மற்றும் அடிப்படை
சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும்
வடிகாலமைப்புச் சபையின் ஊடாகச் செயற்படுத்தப்படும் இத்திட்டம் 2013ம் ஆண்டில்
பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பத்து பில்லியன் ரூபா
(85 மில்லியன் அமெரிக்க டாலர்களை) இலங்கைக்கு நிதியுதவியாக வழங்க முன்வந்துள்ளது.
இந்நிதி உதவிக்கான உடன்படிக்கைகளில் நிதித்திட்டமிடல் அமைச்சின் செயலாளர் சுமித்
அபேசிங்கவும் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற் கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி
வங்கியின் உபதலைவர் ஷியாயு ஷாவோவும் கொழும்பில் நேற்று கைச்சாத்திட்டனர்.
இந்நிதியுதவி மூலம் உலர் வலய நகரங்களில் நீர்வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார
மேம்பாட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்று நிதியமைச்சு அதிகாரியொருவர்
நேற்று தெரிவித்தார். உலர் வலய நகர நீர்வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார
மேம்பாட்டுத் திட்டத்திற்கென 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
செலவிடப்படவிருக்கிறது. இதில் ஆசிய அபிவிருத்தி வங்கி 59.78 மில்லியன் அமெரிக்க
டாலர்களை இலகு கடனாகவும், 23.22 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாகவும் வழங்க
முன்வந்திருக்கிறது. இதேநேரம் நெதர்லாந்து நம்பிக்கை நிதியத்தில் இருந்து 2
மில்லியன் அமெரிக்க டாலர்களும் இத்திட்டத்திற்குக் கிடைக்கப் பெறவுள்ளது.
இத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் 28 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடவுள்ளது
என்றும் அவ்வதிகாரி கூறினார்.
அதிகளின் அத்துமீறிய செயலால்
இராணுவம் சுட்டுள்ளனர் இதில்;
2 பேர் கொலை 2 பேர் காயம்
01-07-2009:08.35:00

இராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிப்பதற்கு வேலி
அமைக்கப்பட்டபோது, தரைக்கு நேராகச் செல்லும் முள்கம்பிகளால் அமைக்கப் பட்டன. இரண்டு
முகாம்களிலும்
தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள், இவ் முள்கம் பிகளுக்குள் ஒரு உள்புகும் வழியை
அமைத்து பிரித்து வைக்கப்பட்டிருந்த தமது குடும்ப அங்கத்தவர் களைப் பார்த்து
வந்தார்கள். இப்படியான உள்புகும் பாதை அமைக்கப்பட்ட போதெல்லாம், மக்களை இரண்டு
முகாம்களுக்கும் இடையே மாறி மாறிச் செல்வதைத் தடுப்பதற்காக, அது பின்பு
அடைக்கப்பட்டு வந்தது. ஆனால், மக்கள் தொடர்ந்து தமது பாதையை இவ்வேலிகளுக்கூடாக
அமைத்துச் மாறி மாறி சென்று வந்தார்கள். அதனால், அதிகாரிகளோ வழமையான வேலியை
முள்கம்பி வேலிகளைப் பாவித்து குறுக்கும் நெடுக்குமாக அமைத்து மேலும்
வலுப்படுத்தியிருந்தார்கள். இதனால், வெறுப்பும், ஆத்திரமும் கோபமுமடைந்த தடுத்து
வைக்கப்பட்டிருந்தோர், பலப்படுத்திய முள்கம்பிகளுக் குள்ளாகவும் பிரித்து
வைக்கப்பட்டிருந்த தமது உறவினரைப் பார்ப்பதற்கு ஞாயிற்றுக் கிழமைகாலை முயற்சிசெய்த
போதே இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றும் இந்த துப்பாக்கிச்சூட்டில்
2 பேர் கொலைசெய்யப்பட்டும் மற்றும் 2 பேருக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டும்
உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள்
சர்வகட்சிப் பேரவை 120 அமர்வுகளை
நடாத்தியுள்ள போதிலும், இதுவரையில்
காத்திரமான இறுதித் தீர்வு எட்டவில்லை
01-07-2009:08.35:00

சமாதானப் பேரவையின் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வகட்சிப்
பேரவையின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும்
என
சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் சமாதானப் பேரவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்
சர்வகட்சிப் பேரவையின் நடவடிக்கைகளை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாதென
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நீடித்து வரும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்
நோக்கில் 2006ம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வகட்சிப் பேரவையின் நடவடிக்கைகள்
முடிவுறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வகட்சிப் பேரவையின்
நடவடிக்கைகளுக்காக இன்னும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாத கால
அவகாசத்திற்குள் இறுதிப் பரிந்துரைகளை சர்வகட்சிப் பேரவை சமர்ப்பிக்க வேண்டுமென
பேரவையின் பணிப்பாளரிடம் கோரப்பட் டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் சர்வகட்சிப்
பேரவை உரிய தீர்வுத் திட்டங்களை முன்வைக்க தவறினால், வேறும் மாற்று வழிகள் குறித்து
ஆராயப்படும் எனத் தெரிவிக்கப் படுகிறது. சர்வகட்சிப் பேரவை அமர்வுகளை சீரான
முறையில் முன்னெடுத்துச் செல்ல தேசிய சமாதானப் பேரவை காத்திரமான பங்களிப்பினை
நல்கியுள்ளது. குறிப்பாக பேரவையின் அமர்வுகளின் போது சமாதானப் பேரவை மொழிபெயர்ப்
பாளர்களை வழங்கியுள்ளது. இதேவேளை, சமாதானப் பேரவை அற்ற சர்வகட்சிப் பேரவை நடனக்
கலைஞர் அற்ற அரங்கத்தைப் போன்று பயனற்றதென ஹெலயுரிமை சுட்டிக்காட்டியது.
சர்வகட்சிப் பேரவை இதுவரையில் 120 அமர்வுகளை நடாத்தியுள்ள போதிலும், இதுவரையில்
காத்திரமான இறுதித் தீர்வுத் திட்டமொன்றை எட்டவில்லை என்பது தான் வேடிக்கையான
விடையம் என்றும் குறிப்பிட்டுள்ளது
புலிகளின் மூத்த, மற்றும்
உறுப்பினர்களை படுகொலை
செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
01-07-2009:08.35:00

இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட புலிப்பயங்கரவாதிகள் கீழ்மட்ட உறுப்பினர்
களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டம் மேற்கொள்ளப் பட்டு
வருகின்றது. இதனை அரசின் சட்டப் பிரிவை ஆதாரம்காட்டி கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகை
தெரிவிக்கிறது. புலிகள் அமைப்பில் இருந்து மேல்மட்ட, இடைநிலை உறுப்பினர்கள்
அனைவரும் கொல்லப்பட்டு விட்ட தாகவும், யாராவது கைது செய்யப்பட்டிருந்தால், அவர்கள்
நீதிமன்றத் தில் முன்னிறுத்தப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த
அறிவித்தல் ஊடாக, படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, மறைமுக இடங்க ளில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள புலிகளின் மூத்த உறுப்பினர்கள் படுகொலை செய்யப் படலாம் என அச்சம்
வெளியிடப்பட்டுள்ளது. படையினரால் 20,000 வரையிலான போராளிகள் சிறைப்பிடிக்கப்
பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற போதிலும், 10,000 இற்கும் குறைவான வர்கள் கைது
செய்யப்பட்டதாக அரசு அறிவித்திருந்தது. எனினும் இலங்கை அரசினால்
பிடிக்கப்பட்டவர்கள் எல்லாக் கைதிகளுக்கும் என்ன சட்டமோ அதன் படி பிடிபட்டவர்கள்
தமது உறவுகளுடன் சந்திக்கும் சந்தர்ப்பங்களை செஞ்சிலுவை அதிகாரிகள்
செய்துகொடுத்தள்ளதாக கடந்த காலத்தில் அறிக்கைகள் தெரிவித்தும் வருகின்றது
மறைமுக நோக்கங்களற்ற வன்னி
மக்களுக்கான போராட்டங்கள்
அவசியம்! த ஜெயபாலன்
01-07-2009:08.35:00

இன்று (யூன் 24 2009) மாலை நான்கு மணி முதல் மாலை ஆறு மணிவரை லண்டனில் உள்ள
கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன்பாக வன்னியில் உள்ள இடம்பெயர்வு முகாம்களை உடனடியாக
மூடிமக்களை மீளக் குடியேற் றும்படி கோரி போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு
உள்ளது. மேலும் இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதே நிதியுதவிகளுக்கு என்ன
நடக்கின்றது
என்றும் இப்போராட்டம் கேள்வி எழுப்பி உள்ளது. ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பு
ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டமே புலிகளின் அரசியல் நலன்களுக்கு வெளியே
வன்னிமக்களின் நலனில் அக்கறையுடன் நடத்தப்படுகின்ற போராட்ட மாகும். ஸ்ரொப் தி
ஸ்லோட்டர் ஒப்ரமில்ஸ் என்ற போராட்டத்தை முன்னெடுத் தவர்களே தற்போது முகாமில் உள்ள
மக்களை வெளியேற்றும்படி கோரும் இப்போராட்டத்தை ரமிழ் சொலிடாரிற்றி என்பதன் கீழ்
முன்னெடுக்கின்றனர். இப்போராட்டங்களில் மட்டுமே தமிழரல்லாத பிற சமூகங்களும் இணைந்து
தமிழ் மக்களுக்கான ஆதரவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான போராட்டம்
பிராஸ்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளின் கூட்டான சமூகப் பாதுகாப்பு அமைப்பினால்
ஊழஅவைé னந னுéகநளெந ளுழஉயைட முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. யூன் 20ல்
சர்வதேச அகதிகள் தினம். கடந்த ஆண்டு முடிவு வரை 42 மில்லியன் மக்கள்
அகதிகளாக்கப்பட்டு உள்ளதாக யுஎன்எச்சிஆர் குறிப்பிடு கின்றது. இவர்களில் 26
மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளினுள்ளேயே தமது வாழ்விடங்களில் இருந்து
வேரறுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் வளர்ச்சி அடைந்துவரும்
நாடுகளிலேயே வாழ்கின்றனர். ஏனையவர்கள் அகதிகளாகவும் அரசியல் தஞ்சம் கோரியும் வேறு
நாடுகளில் வாழ்கின்றனரர். 2008 முடிவில் 504 800 பேர் இடம்பெயர்க்கப்பட்டு
வாழ்ந்தனர். இவர்களில் வன்னி மக்கள் 300 000 பேர்வரை தற்போது வடக்கு கிழக்கில் உள்ள
20 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் 1990
ஒக்ரோபர் 20ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய வடக்கு
மாவட்டங்களில் இருந்து விரட்டி யடிக்கப்பட் முஸ்லீம் மக்கள் இன்னமும்
புத்தளத்திலும் கிழக்கிலும் வாழ்கின்றனர். மே 18ல் பிரபாகரனின் மரணத்துடன்
முடிவுக்கு வந்த இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம்
மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசு சர்வதேச யுத்த விதிகளை மீறி
தனது சொந்த மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் அந்த மக்கள்
செறிந்திருந்த பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதை
சர்வதேச உரிமை அமைப்புகள் அனைத்துமே சுட்டிக்காட்டி உள்ளன. சர்வதேச மனிதாபிமான
அமைப்புகள் ஊடகங்கள் எவற்றையும் அனுமதிக்காமல் சாட்சியமற்ற யுத்தத்தை
மனிதப்படுகொலைகளை நிகழ்தியதாக அவை சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளன. அதே சமயம் தமிழீழ
விடுதலைப் புலிகளும் தங்களைப் பாதுகாப்பதற்காக மக்களை மனிதக் கேடயங்களாக்கி மக்கள்
மத்தியில் இருந்தே தாக்குதலை நடத்தி மனித அவலம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.
இதனை முழுமையாக அறிந்திருந்த பிரிஎப் ரிவைஓ மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த
புலி ஆதரவு அமைப்புக்கள் வன்னிமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும் படி கோராமல்
வன்னி மக்களும் புலிகளும் ஒன்று, மக்கள் சுயவிருப்பிலேயே யுத்தப் பகுதிக்குள்
இருக்கின்றனர் என பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர். 20 000 தமிழ் மக்கள்
கொல்லப்பட்டதற்கு பிரிஎப் உம் பொறுப்புடையது என தீபம் தொலைக்காட்சியில் யூன் 19ல்
இடம்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ‘தேசம்நெற்’ சார்பிலும் ஏனைய நேயர்கள் சிலரும்
கேள்வி எழுப்பிய போது பிரிஎப் சார்பில் கலந்துகொண்ட பத்மநாதன் விடுதலைப் ‘புலிகள்
யார்? அவர்களும் எம்மவர்கள்தானே. அவர்களை விட்டுவிட்டு எப்படி மக்களை வெளியேறும்படி
கேட்க முடியும்.’ என்று பதிலளித்தார். விடுதலைப் புலிகளுக்கு அந்த மக்களை
கேடயங்களாக வைத்திருக்க பிரிஎப் உம் உடந்தை யாக இருந்ததை அப்பதில் தெளிவாக்கி
உள்ளது. அதே நிகழ்ச்சியில் பிரிஎப் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் வழங்கிய
மிகைப்படுத்திய பொய்யான தகவல்களே இவ்வளவு மோசமான அழிவுக்கு இட்டுச்சென்றது அதற்கு
பிரிஎப் வன்னி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு
பத்மநாதனிடம் பதில் இருக்கவில்லை. நடந்து முடிந்த மனித உரிமை மீறல்களுக்கும்
படுகொலைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சம பொறுப்புடையவர்கள்
என்பது பரவலாக அனைத்து மனிதாபிமான மற்றும் உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு
உள்ளது. அப்படியான நிலையில் சிங்கங் கொடியையும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின்
படத்தையும் கொண்டுவந்து மனித உரிமை பற்றி பேசுவது எவ்வளவு கேலியானதோ அதே போல்
புலிக்கொடியையும் அதன் தலைவர் பிரபாகரனது படத்தையும் கொண்டு வந்து மனிதஉரிமைப்
போராட்டம் செய்வதும் கேலிக்குரியதே. வன்னி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த இவை
எப்போதும் மனிதஉரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவே அமையும். அந்த வகையில்
வன்னி மக்களின் இரத்தக் கறைபடியாத ரமிழ் சொலிடாரிற்ரி போன்ற அமைப்புகளின்
போராட்டங்களே மனித உரிமையை வென்றெடுக்க வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்காக குரல்
எழுப்ப தகமையுடையன. இப்போராட்ட ங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை
குறிப்பிடத்தக்க அளவினதாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாயம்
கௌரவி க்கப்படும். யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வன்னி
முகாம்களில் உள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு முகாம் எவ்வாறு
பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையின் குறைந்தபட்ச விடயங்கள் கூட இன்னமும்
முகாம்களில் பிரச்சினையாகவே உள்ளது. சர்வதேச உதவி அமைப்புகளைக் கூட பல்வேறு
கட்டுப்பாடுகளை விதித்து அவர்கள் பணியாற்று வதைத் தடுக்கின்றது. அரசு மிகக்கடுமையான
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையில் வன்னி முகாம்களை பரமரிப்பதில் நிதித்
தட்டுப் பாட்டினைக் கொண்டுள்ளது. ஆனாலும் சர்வதேச மனிதாபிமான அமைப்பு களையும்
பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவில்லை. இவை இலங்கையரசு தமிழ் மக்களை இரண்டாம்தரப்
பிரஜைகளாகவே நடத்துகின்றது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்து வதாகவே உள்ளது.
இடம்பெயர்ந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வை மட்டுமே
கவனத்திற்கொண்டு அம்மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது தவிர்க்க
முடியாதது. அந்த வகையில் மறைமுக நோக்கங்களற்ற ரமிழ் சொலிடாரிற்றி போன்ற
அமைப்புகளின் போராட்டங்கள் இலங்கை அரசு மீது தொடர்ச்சியான அழுத்தங்களை
மேற்கொள்வதற்கு அவசியம்.
மகிந்த சிந்தனையில் மக்கள்
மட்டுமல்ல நாட்டில் பல இடங்களில்;
அமைதியும் சமாதானமும் அதிகம்
01-07-2009:08.35:00

யாழ்ப்பாணத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கும் நாம் விஜயம் செய்தோம். அங்கு ஆசிரியர்
பற்றாக்குறை எதுவும் கிடையாது. தொண்டர் ஆசிரியர்களுக்கு தேர்தலின் பின்னர்
நியமனம்
வழங்க உள்ளோம். ஏ-9 வீதியினூடாக லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள்
எடுத்துச் செல்லப்படுவதால் அங்கு பொருட்களின் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
30 வருடங் களாகக் கிடைக்காத கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் வடபகுதி
மக்களுக்குத் தற்பொழுது கிடைத்து வருகிறது. அந்த மக்கள் அதிகாரப் பகிர்வு குறித்து
எதுவும் கோரவில்லை. யாழ்ப் பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்
செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும்
நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான
சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார். 1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர்
ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச்
சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊரார்பணத்தை கொள்ளை யடித்தசோம்பேறிகளும்
ஊரார் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து குப்பை
கொட்டிய புலிவால் இணையதளங்கள் இன்றும்
ஊதுகுழளாய் இருப்பதால் தமிழருக்கு என்னலாபம்???
01-07-2009:08.35:00

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே உலாவரும்
மில்லியன் டாலர் கேள்வி???... என்று இணையதளப்பிரியர்கள் இன்னும் வாங்கி திண்ணவும்
மக்களை ஏமாற்றவும், வாங்கியகடன் அடைக்கவும், வங்கியை ஏமாற்றிய திருட்டு வேளைகளுக்கு
சாந்துபூச போடும் திட்டத்திற்குள் பிரபாகரனின் வாழ்க்கை சோகங்கள் தெரியாத சோம்பேறிக்
கூட்டங்கள் மீண்டும், மீண்டும் அநாகரீகமான முறையில் மக்களின் துயரங்களை அல்லது
நேசித்தவர்களின் உணர்வுகளை தூண்டும் பொய்யான தகவல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு தமிழன் இருந்தான். அவன் இராணுவத்தை கடந்த 30 வருடங்களாக வன்னிமண்ணில்
கால்பதிக்கவிடவில்லை என்பது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஆனால்
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிஊதாரிகள் தாங்கள் வியாபரம் செய்யவும், தம்மை
மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யவும், தமது கௌவுரவத்தை வளர்க்கவும், கோவில்களில்
குடைபிடிக்கவும், பணம்சேர்க்கவும், மற்றும் வங்கிகடன் எடுத்துக் கொடுக்கவும்,
காப்புறுதிகள் செய்யவும், மற்றும் வெள்ளைத்தரகர்களோடு சேர்ந்து தமிழர்களை இணைத்து
தமக்கு தரகர்பணத்திற்கு அலையும் கூட்டத்திற்கு பிரபாகரன் கறுப்பா வெள்ளையா குட்டையா
என்று தெரியாதவர்கள் வெறும்வாயை சப்பி மக்களை மேலும் ஏமாற்று வதை உலகத்தமிழர்கள்
உடனடியாக கவணத்தில் எடுக்கவேண்டும்; என்று வேண்டுகோள் விடப் படுகின்றது. இன்று
தமிழர்களின் பெருமை ஒருபுறமிருக்கு வரலாற்றுப் பதிவுகள் மறுபுறத்தில் உள்ளது.
அத்தோடு கரைபடிந்த நிலையும் அதிகமுள்ளது. இதனால் இணையதளங்கள் ஆதாரங்கள் இல்லாது
தேடும் செய்திகள் மேலும் ஒற்றுமொத்த தமிழர்களை படுகுழியில் தள்ளுகின்றது. தமிழினம்
என்பது ஒரு ஆலமரம் அதில் பிரபாகரன் என்பது ஒரு விழுது என்பதை, நாம் அறிவோம் ஆனால்
குடை பிடிக்கும் இணையதளங்கள் தமது வருமானத்தை தேடி அலைவதை “ஈரனல்” போன்ற பல
முற்போக்கான இணைய தளங்களும் மற்றும் ஊடகவியளாலர்களும் கடுமையாக கண்டிக்கின்றார்கள்.
கடந்த 30வருடத்தில் 20வருடமாக வெளிநாடுகளில் நடந்த அத்தனை கலாச்சார விடையங்களும்
ஆயுதக் கலாச்சாரத்தின் அடிப்படையில் தான் அமர்ந்தது. ஆனால், இன்று ஆயுதம் தூக்க
பலம் இல்லாத நிலையில் தமிழர்கள் அடக்கு ஒடுக்கி அமர்த்தப்பட்டுவிட்டார்கள.; அந்த
ஏழை எளிய மக்களுக்கான ஒரு வாழ்விதத்தை முன்னெடுக்க வக்கற்ற இணையதளங்களும் அதன்
கூட்டமும் எதற்கு “தமது பல்லைக்குத்தி மற்றுவர்களுக்கு மனக்கக் கொடுக்கின்றது”
என்பது தான் மக்களின் கேள்வி. இன்று இத்தனை அழிவுக்குப்பின் பிரபாகரன் இருந்துதான்
என்ன? இறந்துதான் என்ன?? எந்தப் பிரியோசமணமும் இல்லை அங்குள்ள மக்களுக்கு என்பது
தான் உலாவரும் மில்லியன் டாலர் கேள்விகள் என்றார் தமிழ் ஏடு ஆசிரியர்.
நாட்டை பாதுகாக்கும் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரில்
விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தலில், உதயன் பத்திரிகையின் பணியாளர்களை நேற்றுடன்
தமது பணிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு எச்சரித்திருந்தது. அவ்வாறு செய்யாது
போனால் கொலை செய்யப்படுவீர்கள் என அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில்
யாழ்ப்பாணத்தில் வெளியாகும் இந்தப் பத்திரிகையை முடக்கும் தேவை யாருக்கு இருக்கிறது
என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. உதயன் பத்திரிகையின்
பணியாளர்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ள இந்த அமைப்பு ஊடக சுதந்திரத்திற்கு
மதிப்பளிக்குமாறு, யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில்போட்டியிடும் அனைத்து அரசியல்
கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்
விடுதலைக் கூட்டணி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகள் உதயன் பத்திரிகைக்கு
விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக கண்டனத் தை வெளியிட்டுள்ள போதிலும்
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை மேற் கொள்ள கூடிய சூழலை இவர்கள்
ஏற்படுத்த வேண்டும் எனவும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடக
சுதந்திரம் இல்லாத நிலையில் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தமுடியாது
என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. உதயன் பத்திரிகையின்
பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்ப்பு
தெரிவித்து, அந்த அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.
இன்று இனமத பேதங்களின்றி சகலரும்
நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய
நீதித்துறை ஒன்று அத்தியவசியம்
01-07-2009:08.35:00

நீதிமன்றங்கள் வழங்கிய சில தீர்ப்புக்கள் இனங்களுக்கு இடையிலான பிரிவினை வாதத்தை
மேலும் வலுப்படுத்தியதாக கருத்துக்களை பலர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத
கைதுகள் மற்றும் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படும் உரிமை மீறல்கள் குறித்து
நீதிமன்றங்கள் இதுவரையில் காத்திரமான தீர்ப்புக்களை வழங்கியதில்லை. நீதிமன்றங்களின்
சுயாதீனத் தன்மையை நிலைநாட்டுவது மிகவும் இன்றியமை யாததென்றும், அரசியல் தலைவர்கள்
சட்டம் ஒழுங்களை சரிவர கடைபிடிக்காத வகையில் நீதிமன்ற கட்டமைப்பு வெறும்
கட்டடங்களுக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் என்றும் இதற்கு முன்னர் பதவியிலிருந்த
பிரதம நீதியரசர் சிங்கள கடும்போக்குடைய கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்ததாக சர்வதேச
அனர்த்த குழுவின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் ரொபர்ட் டெம்லர் சுட்டிக்காட்டிவருவது
மகி;ந்த ஆளும |